அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஞானசேகரன் ஒரு சாரிடம் பேசியதாக எஸ்ஐடி குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாக ஆதாரமற்ற தகவல் பரவி வருகிறது. திருப்பூரை சேர்ந்த ஒருவர் வழக்கில் தொடர்புடையதாகவும் ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவை யாவும் அடிப்படை ஆதாரமற்றவை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.