மதுரை மாவட்டம் மத்திய தொகுதியில் மூன்றாவது முறையாக திமுகவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் களமிறங்குவது உறுதியாகி விட்டது. தொகுதி முழுவதும் அமைச்சர், தனது ஆதரவாளர்களை களம் இறக்கி தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார். அதிமுக சார்பில் போட்டியிட ஜெயபால் அல்லது பி.எம்.மன்னனை நிறுத்த கட்சித் தலைமை ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது. அமமுகவை சேர்ந்த டேவிட் அண்ணாதுரை போட்டியிட்டால், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கடும் போட்டியை தரலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.