தமிழகத்தின் புதிய காவல்துறை டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சட்டம் பயின்றுள்ளார். 1994ல் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரியான இவர், சேலம் ரயில் கொள்ளை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு போன்ற முக்கிய வழக்குகளில் திறம்பட விசாரணை நடத்தியுள்ளார். தேனி, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, சிபிசிஐடி ஐஜி, மதுரை கமிஷனர், ஆயுதப்படை டிஜிபி, எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.