தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகக் கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பது
அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் சட்டப்படிப்பை முடித்து, பிரெஸ்டீஜ் குழுமத்தின் முன்னாள் சிஇஓ-வாக இருந்த இவர், அந்நிறுவனத்தின் இமாலய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆவார். மேலும், "feedmycity" என்ற தனது அறக்கட்டளை மூலம் தினமும் பலருக்கு உணவு வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.