சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் நிலவரம் மற்றும் டாலர் மதிப்புக்கு ஏற்ப இந்தியாவில் தினமும் காலை 6 மணிக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. இந்த அடிப்படை விலையுடன் மத்திய அரசின் கலால் வரி மற்றும் மாநில அரசுகளின் வாட் (VAT) வரி போன்ற கூடுதல் வரிகள் சேர்க்கப்பட்டு இறுதி சில்லறை விற்பனை விலை தீர்மானிக்கப்படுகிறது.