கடந்த 1833-ம் ஆண்டின் சாசன சட்டத்தின்படி, வில்லியம் பெண்டிங்
பிரபு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். சதி ஒழிப்பு மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் மூலம் இவர் இந்திய வரலாற்றில் இன்று வரை நீங்கா இடம்பிடித்துள்ளார். நிர்வாக ரீதியாக ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்த பெருமை இவரை சாரும்.