பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் யாருடன் அணி சேருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்புமணி, ராமதாஸை கட்சியில் இருந்து நீக்கியது, சிபிஐ வழக்குகள் போன்ற காரணங்களால் இருவரும் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்ற சூழல் நிலவியது. அதிமுக, வட தமிழகம், கொங்கு மற்றும் டெல்டா பகுதிகளில் வெற்றி பெற அன்புமணியை அரவணைத்துள்ளது. ராமதாஸ், திமுக அல்லது தவெக உடன் கூட்டணி செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.