விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் அரசியை இலவசமாக கொடுக்கும் அரசு, குவாட்டர் பாட்டில்களை வழங்காதது ஏன்? என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். திருச்சியில் இன்று (பிப்., 18) செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறிவை கற்பிக்கும் ஆசிரியர்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலை உள்ளது. அப்படியானால் இது எப்படிப்பட்ட நாடு? மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என பல பிரச்சனைகள் உள்ளன என்று தெரிவித்தார்.