லாட்டரி நிறுவனத்திடமிருந்து ஏன் ரூ.900 கோடி வாங்கினார்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சொல்ல வேண்டும் என அமைச்சர் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார். கட்சி நன்கொடை விவகாரம் குறித்து எழுந்த விவாதத்தின் போது, பதிலளித்த உதயநிதி, அதை கொடுத்தது அவரது மாமனார்தான் (மார்ட்டின்) அவரிடம் விளக்கத்தை பெற்றுக்கொள்ளட்டும் என்றார். உடனே பதிலடி கொடுத்த அமைச்சர், அது அவருக்கும், உங்கள் அப்பாவுக்கும் மட்டும்தான் தெரியும். 'அப்பாவ இங்க காணோம்'. அவரிடம் கேளுங்கள் என கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.