வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய விஜய், முதல்வர் ஸ்டாலின் எனக்கு நண்பர் என கூறியுள்ளார். மேலும், "ஊடகத்திற்கு பேட்டியளித்தபோது, தன்னை எதிரியாக நினைப்பவர்கள் எல்லாம் எனக்கு நண்பர்கள் என முதல்வர் கூறினார். அப்படி நான் உங்களுக்கு நண்பன் என்றால் கரூர் விஷயத்தில் ஏன் என் மீது பழியை தூக்கி போட்டீங்க? உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அப்படி பேசியிருப்பிங்களா? எல்லாத்தையும் நீங்களே பண்ணிட்டு போறபோக்குல பொய்களை பேசிட்டு இருக்கீங்க" என கூறினார்.