வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை பிரதமர் மோடி கண்டிக்காதது ஏன்? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றபின் சிறுபான்மையினர், பழங்குடியினர் மீதான தாக்குதல் தொடர்கதையாகி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் கள்ள மௌனம் காப்பது ஏன்? என்றும் சாடியுள்ளார்.