மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் முடி வெட்ட கூடாது என்று நம்ம வீட்டில் எல்லாம் சொல்வார்கள். ஆன்மிக ரீதியாக சொல்லப்போனால் கருவில் ஒரு உயிர் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் வளர்ச்சிகரமான செயல்களை மட்டும் தான் செய்ய வேண்டும். முடியை வெட்டுவது, தாடியை சேவ் செய்வது போன்ற வளர்ச்சியை தடுக்க கூடிய செயல்களை செய்ய கூடாது என்று கூறுவார்கள். இதனால் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.