ஸ்மார்ட்போன்கள் அடிக்கடி சூடாவதற்கு அதிகப்படியான பயன்பாடு, பின்னணியில் இயங்கும் செயலிகள் மற்றும் நீண்ட நேரம் தொடர்ந்து ‘ஹெவி கேம்ஸ்’ விளையாடுவது ஆகியவை முக்கிய காரணங்களாகும். மேலும், மொபைலை சார்ஜ் செய்துகொண்டே பயன்படுத்துவது, தரமற்ற சார்ஜர்களை உபயோகிப்பது மற்றும் நேரடி சூரிய ஒளியில் வைப்பதும் பேட்டரி மற்றும் பிராசஸரை அதிகளவில் வெப்பமடையச் செய்கிறது. மொபைல் சூடாவதைத் தடுக்க தேவையற்ற செயலிகளை நீக்குவதோடு, சார்ஜ் செய்யும்போது மொபைல் கவரை கழற்றி வைப்பது நல்லது.