பொங்கல் பண்டிகை அன்று கரும்பு ஏன் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது? என பார்க்கலாம். பொறுமையாக வளரும் கரும்பு இறுதியில் நமக்கு இனிப்பை தருகிறது. அதன்படி, இளமையில் கஷ்டப்பட்டால் முதுமையில் இனிமையாக வாழ முடியும் என்பதை கரும்பு உணர்த்துகிறது. இரண்டாவது விஷயம், பொங்கல் நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யானையின் கல் உருவத்திற்கு சிவன் கரும்பு ஊட்டியதாக கூறப்படுகிறது. இதன் நினைவாக பொங்கல் பண்டிகையின் போது கரும்பு முக்கியத்துவம் பெறுவதாக கூறப்படுகிறது.