நடிகர் விஜய் மீதான விமர்சனம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை; அவரை கைது செய்ய வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்தவில்லை. நடந்த சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்றுதான் விமர்சனம் செய்து வருகிறோம்" என்று அவர் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளுமே அரசியல் செய்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.