ஸ்ரீரங்கம் எம்எல்ஏவை கைது செய்யாதது ஏன்? - விஜய் கண்டனம்

19பார்த்தது
ஸ்ரீரங்கம் எம்எல்ஏவை கைது செய்யாதது ஏன்? - விஜய் கண்டனம்
ஜனநாயகத்தின் 4வது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதல் நடத்தியதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோ அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதலமைச்சர் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது' என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி