இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த மனைவி கைது

63பார்த்தது
இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த மனைவி கைது
உத்தரப் பிரதேசத்தில் ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகையை பெறும் நோக்கில், ப்ளே ஸ்கூல் உரிமையாளரான கணவரை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்ததாக அவரது மனைவி தாமினி கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை கொன்ற பிறகு, பள்ளி வேன் ஓட்டுநருடன் சேர்ந்து வாழ திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவில் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியதைத் தொடர்ந்து சந்தேகம் எழுந்து விசாரணை நடத்தப்பட்டதில் உண்மை வெளிச்சத்துக்கு வந்ததாகவும், இருவரையும் போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி