தான் வாங்கிய சம்பளம் குறைந்துவிட்டதால், மனைவி தன்னை விவாகரத்து செய்ததாக சீனாவைச் சேர்ந்த சியான்சியான் என்பவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், "ஒருகாலத்தில் மாதம் ரூ.6.23 லட்சம் சம்பாதித்தேன். மனைவிக்காக பணத்தை செலவழித்தேன். பின்னர், அந்த வேலையை இழந்து, உணவு டெலிவரி வேலை செய்துவருகிறேன். வருமானம் குறைந்ததும், மனைவி விவாகரத்து கோரினார். அப்போது தான் 'அவர் என்னைக் காதலிக்கவில்லை, வசதிக்காக மட்டுமே என்னை தேர்வு செய்தார்' என்ற உண்மை தெரிந்தது” என குறிப்பிட்டுள்ளார்.