சத்தீஸ்கர் ஜஷ்பூரில், மங்கரீதா பகத் என்பவர் தனது கணவர் சந்தோஷ் பகத் (43) மீது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து இரும்புச் சுத்தியால் தாக்கி கொலை செய்தார். பின்னர் உடலை டிராலி சூட்கேஸில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் தனது திருமணமான மகளை செல்போனில் அழைத்து குற்றத்தை ஒப்புக்கொண்டார். வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.