மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கணவன் கண் முன்னே மனைவி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லாரி ஓட்டுநரான மார்நாடு, நேற்று நள்ளிரவு லாரியை தனது வீட்டில் நிறுத்தும்போது, மனைவி ரங்கநாயகி பின்புறம் நின்றுகொண்டிருந்தது தெரியாமல் வாகனத்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். அப்போது ரங்கநாயகி மீது லாரி ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.