மனைவி, மாமியாருக்கு கத்திக்குத்து.. கணவன் வெறிச்செயல்

60பார்த்தது
மனைவி, மாமியாருக்கு கத்திக்குத்து.. கணவன் வெறிச்செயல்
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உண்ணியூரை சேர்ந்தவர் முத்துகோபால். இவரது மனைவி வினிதா. தம்பதியர் இடையே கருத்துவேறுபாடு காரணமாக வினிதா அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு வந்த வினிதாவை முத்து வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதற்கு வினிதா மறுத்ததால் அவர் கத்தியால் குத்தியுள்ளார். மேலும் தடுக்க வந்த அவரது மாமியாரையும் குத்தியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.