கணவனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் வி.அரியலூரைச் சேர்ந்தவர் ராஜகுமாரன் (35). மனைவி லதா (33). இவரின் கள்ளக்காதலன் ரஞ்சித் (31). இவர்கள் இருவரும் ராஜகுமாரனை 2020 மார்ச் மாதத்தில் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். இயற்கை மரணம் என மனைவி நாடக மாறியதை அடுத்து இறந்தவரின் சகோதரர் முத்துக்குமரன் போலீசில் புகார் அளித்திருந்தார். விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு இன்று நீதிபதி இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.