தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வந்த ஆம் ஆத்மி இந்தமுறை திமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் படி அக்கட்சியின் மாநில தலைவர் வசீகரன் சென்னையில் இன்று (மார்ச் 04) செய்தியாளர்களை சந்தித்த போது, 'எங்களுக்கு இந்த முறை திமுக ஒரு வாய்ப்பை தரும் என நினைக்கிறோம்' என தெரிவித்தார்.