அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமியுடன், 'தமிழக வெற்றி கழகம்' (தவெக) தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2018-ஆம் ஆண்டு நீக்கப்பட்ட இவர், தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வருகிறார். 1984-இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவருக்கு, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு உள்ளது. இதனால், அவரைத் தங்கள் கட்சியில் இணைக்க தவெக தரப்பு தீவிரமாக முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.