தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான
அண்ணாமலை, ஜூன் 4-ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக தனியார் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. கடந்த ஓராண்டாக பொறுப்புகள் ஏதுமின்றி இருக்கும் அவர், தனது நற்பணி மன்றத்திற்கு தீவிரமாக நிர்வாகிகளை நியமித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக பிரபல ஆன்மிக தலைவர் ரவிசங்கரை சந்தித்து, தனது
அரசியல் நிலைப்பாட்டை
பாஜக தேசிய தலைமையிடம் விளக்குமாறு அவர் முறையிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.