தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உருவாகும் நிலை உள்ளது. பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக கேட்கவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.