வீட்டை மாற்றுவாரா முதல்வர் விஜய்?

நீலாங்கரையிலுள்ள முதல்வர் விஜய்யின் இல்லத்திலிருந்து தலைமைச் செயலகம் சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளதால், தினசரி அவரது பயணத்தின்போது போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்வது காவல் துறைக்குச் சவாலாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக் கோட்டைக்கு அருகிலுள்ள அரசு இல்லத்திற்கு முதல்வர் குடியேற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
