தலைமைச் செயலகக் கோட்டை கட்டடத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு இடமாற்றம் செய்ய முதல்வர்
விஜய் முடிவு செய்துள்ளதாகத் தனியார் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜோதிடரின் ஆலோசனையின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுகுறித்து தமிழக அரசிடமிருந்தோ அல்லது முதல்வர் அலுவலகத்திலிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
நன்றி: கலைஞர் செய்திகள்