தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய இரு மசோதாக்களையும் மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள
பாஜக, அதற்கு திமுகவின் ஆதரவை நாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில்
திமுக தற்போது எதிர்க்கட்சியாக உள்ள சூழலில், அக்கட்சி விரும்பும் சில முக்கிய மாற்றங்களையும் மசோதாவில் சேர்க்க
பாஜக முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக திமுகவுடன்
பாஜக தொடர்பில் இருப்பதாகவும் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.