2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் மாற்று வீரராக திலக் வர்மாவை இந்திய அணி நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4-வது வரிசையில் சதம் விளாசி திறமையை நிரூபித்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. ருதுராஜை விடுத்து திலக் வர்மாவை மாற்று வீரராக பரிசீலிப்பது ஏன் என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.