சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்காட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் வந்த மிரட்டலை அடுத்து, போலீசார் நடத்திய சோதனையில் அந்த மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இது முதல் முறை அல்ல, இதே போன்று கடந்த 9ம் தேதி இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.