புதுச்சேரியில் ஆட்சியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தவெகவுடன் கூட்டணி வைக்க என்.ஆர்.காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக, பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்துள்ளார். அப்போது இந்த தகவலை, ரங்கசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.