முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவில் இணைந்தும் எதிர்பார்த்த முக்கியப் பொறுப்புகள் கிடைக்காததால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் கட்சி மாறத் தயங்கினாலும், தன் மகன் தரப்பு தவெக-வுக்குச் செல்ல ‘கிரீன் சிக்னல்’ கொடுத்துவிட்டதாக
அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.