முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், விரைவில் அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோருக்கு சீட் தர திமுக ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஓபிஎஸ்-க்கு சபாநாயகர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தமாகா நிர்வாகி முனவர் பாஷா ஊடக நிகழ்ச்சியொன்றில் தெரிவித்தார்.