இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 24 மணி நேரத்தில் முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. IND vs PAK போட்டி ரத்தானால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதால், லாகூரில் பாக். கிரிக்கெட் வாரியத் தலைவரை சந்தித்து ஐசிசி தரப்பில் நேற்று சுமார் 5 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்நாட்டு அரசை கலந்தாலோசித்து PCB முடிவை அறிவிக்கும் என கூறப்படுகிறது.