மோசமான சாலைகள் விபத்துகளைக் குறைக்கும் என பாஜக எம்பி விஸ்வேஷ்வர் ரெட்டி கூறியுள்ளார். மேலும், தெலங்கானாவை ஆண்ட முந்தைய பிஆர்எஸ் கட்சி தரமான சாலைகள் அமைக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 19 பேர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி, மோசமான சாலைகளில் வாகனங்கள் மெதுவாகச் செல்வதால் விபத்துகள் குறைகின்றன் எனவும் கூறியுள்ளார்.