சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தனிப்பட்ட முறையில் களப்பணியாற்றி வருகிறார். அவரது 'பென்' நிறுவனம் உடனடி சர்வேக்கள் எடுத்து திமுகவின் சாதக பாதகங்களை சமர்ப்பித்து வருகின்றனர். இதனிடையே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளை சபரீசன் சந்தித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு திமுக சார்பில் ராஜ்யசபாவுக்கு அனுப்பப்படும் நபர்களில் சபரீசனும் ஒருவராக இருக்கலாம் என பேசப்படுகிறது.