தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..? முதல்வர் இன்று ஆலோசனை

4353பார்த்தது
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதியை ஒத்திவைப்பது தொடர்பாக முதல்வர் விஜய் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். கடுமையான வெயில் காரணமாகப் பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்கக் கோரிக்கைகள் எழுந்த நிலையில், வானிலை மைய அறிக்கை பள்ளிக்கல்வித் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த பின், பள்ளிகள் திறப்புத் தள்ளிப்போகுமா என்பது குறித்த முக்கிய முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி