தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்றுள்ள தவெக, ஆட்சியமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்றதொரு போராட்டத்தை முன்னெடுக்க அக்கட்சியினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தவெக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான கருத்துகளை பகிர்ந்து வருவதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.