தவெக அமைச்சரவையில் இடம் பெறும் புதிய அமைச்சர்கள் நாளை (மே.21) பதவியேற்க உள்ளனர். இதில், விசிக மற்றும் ஐயூஎம்எல் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பதாக கூறப்படுகிறது. ஐயூஎம்எல் கட்சிக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், விசிகவுக்கு ஆதிதிராவிடர் அல்லது வேறு முக்கியத்துவம் வாய்ந்த துறையை ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,
திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக கூட்டணியில் விசிக இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.