சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விசிக இரட்டை இலக்க தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் கோரி திமுகவுக்கு அழுத்தம் கொடுத்துவருவதாக கூறப்படுகிறது. திமுகவுக்கு கிடைக்கும் 4 ராஜ்யசபா இடங்களில் காங்கிரஸ், தேமுதிகவுக்கு தலா ஒன்று ஒதுக்கப்பட்டதாக பேசப்படுகிறது. இந்நிலையில், விசிகவுக்கு 8 தொகுதிகள் வழங்க திமுக திட்டமிட்டுள்ள நிலையில், ராஜ்யசபா இடம் குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.