எம்எல்ஏ ஷாப்பிங்கில் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, பொதுமக்கள் மளிகைக் கடையில் கூடப் பொருட்கள் வாங்க முடியாமல் தவிப்பது தெரியுமா என
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தாராபுரத்தில் பரப்புரையின் போது மளிகைக் கடையில் விசாரித்ததில், கடந்த 4 மாதங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது தெரிந்தது எனக் குறிப்பிட்ட அவர், வெறும் ரீல்ஸ் பார்ப்பதால் வயிறு நிறைந்துவிடாது எனச் சாடியுள்ளார்.
நன்றி: சன் நியூஸ்