“மக்களவைத் தேர்தலில் தவெக உடன் இணைந்து போட்டியா?”.. திருமா விளக்கம்

41பார்த்தது
“மக்களவைத் தேர்தலில் தவெக உடன் இணைந்து போட்டியா?”.. திருமா விளக்கம்
விசிக தலைவர் திருமாவளவனிடம், ‘உள்ளாட்சி மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பயணிக்க வாய்ப்புள்ளதா?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "தேர்தல் வரட்டும். தேர்தல் நேரத்தில் அதுகுறித்து பேசலாம்" என திருமாவளவன் சுருக்கமாகப் பதிலளித்துள்ளார். தவெக ஆட்சியில் விசிகவின் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்படும் நிலையில், அவரின் இந்தப் பதில் கூட்டணி மாற்றங்களுக்கான கதவுகள் திறந்திருப்பதையே காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Job Suitcase

Jobs near you