தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆட்சி அமைப்பதில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது 'X' தளத்தில் காரசாரமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காமல், வெறும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பாஜகவை ஆளுநர் அழைக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். மோடி மற்றும் அமித்ஷாவின் அழுத்தத்திற்கு பணிந்து தமிழக மக்களின் தீர்ப்பை மாற்றி எழுத நினைப்பது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.