ஹரியானா மாநிலத்தில், பெண் ஒருவர் 6 வயது சிறுமியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பெற்றோருடன் திருமண விழாவில் கலந்து கொண்ட, சிறுமியை அவரது அத்தை பூனம் கொலை செய்துள்ளார். இவர், தனது குழந்தைகள் உள்பட 4 பேர கொலை செய்தது தெரியவந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், தன்னைவிட குழந்தைகள் அழகாக இருந்ததால் கொலை செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.