காதலன் பிளாக் செய்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

0பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் நர்சிங் மாணவி பிரீத்தி ரயில் முன் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, கல்லூரியின் உரிமையாளர் யக்ஷ் தக்ஷ் மீது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இருப்பினும், காவல்துறையின் தீவிர விசாரணையில், காதலன் அமன் அலைபேசி எண்ணைத் பிளாக் செய்ததால் மனமுடைந்த பிரீத்தி தற்கொலை செய்துகொண்டது வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு, காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி