கடன் தொல்லை தாங்காமல் பெண் தற்கொலை

9323பார்த்தது
கடன் தொல்லை தாங்காமல் பெண் தற்கொலை
புதுக்கோட்டையில் கடன் தொல்லை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராதிகா (37) என்பவர், தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளார். அதனை திருப்பி செலுத்த முடியாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். நிதி நிறுவன ஊழியர்கள் கடன் தொகையைச் செலுத்தக் கூறி ராதிகாவை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி