காங்கிரசில் சேர்ந்த 2 மணிநேரத்திற்குள் மீண்டும் பாஜகவில் இணைந்த பெண் நிர்வாகி

0பார்த்தது
காங்கிரசில் சேர்ந்த 2 மணிநேரத்திற்குள் மீண்டும் பாஜகவில் இணைந்த பெண் நிர்வாகி
குஜராத் மாநிலத்தில் பாஜக பெண் நிர்வாகி சேஜல் என்பவர், அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த இரண்டே மணி நேரத்திற்குள் மீண்டும் தாய் கழகமான பாஜகவிற்கே திரும்பியுள்ளார். முன்னதாக, பாஜகவில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும், நகருக்குள் கள்ளச்சாராய வியாபாரிகளின் அச்சுறுத்தல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி அவர் கட்சியை விட்டு வெளியேறியிருந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இணைந்த சில நிமிடங்களிலேயே தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் பாஜகவில் ஐக்கியமானது பேசுபொருளாக மாறியுள்ளது.

தொடர்புடைய செய்தி