உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆமினா என்ற பெண், அறுவை சிகிச்சை ஏதுமின்றி 5 நாட்களில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். மே 9-ஆம் தேதி முதல் குழந்தையும், அதனைத் தொடர்ந்து மே 14-ஆம் தேதி அடுத்த 3 குழந்தைகளும் பிறந்துள்ளன. மருத்துவ ரீதியாக மிகவும் சவாலான இந்த பிரசவத்திற்குப் பிறகு, தற்போது தாயும் நான்கு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.