சென்னை தியாகராய நகர் பகுதியில், 45 சவரன் தங்க நகை சாலையில் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த பெண் தூய்மைப் பணியாளர் போலீசில் ஒப்படைத்தார். தூய்மைப் பணியாளர் பத்மா என்பவர் பணிசெய்தபோது, அவருக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகள் சாலையில் கிடைத்துள்ளது. உடனடியாக அந்த நகைகளை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து, தங்க நகைகளைத் தவறவிட்ட நங்கநல்லூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டது.